மெக்ஸிகோவில் கொரோனா தடுப்பூசி பெற்ற மருத்துவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

mexico-corna-vaacie-hospital
By Jon Jan 04, 2021 01:46 AM GMT
Report

மெக்ஸிகோவில் ஃபைசர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட மருத்துவர் ஒருவர் கடுமையான உடல்நலக் குறைவு ஏற்பட்டு தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெக்ஸிகோவில் கொரோனா வைரசிற்கு எதிராக ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்த நிலையில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட மருத்துவர் ஒருவருக்கு வலிப்பு ,சுவாசக் கோளாறுகள் மற்றும் பிரச்னைகளால் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாக , அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது .

பைசர் தடுப்பூசியைப் ஏற்றுக் கொண்ட 32 வயதான அந்த மருத்துவர் , தடுப்பூசி செலுத்திய அரை மணி நேரத்தில் உடல் தடிப்புகள் , வலிப்பு , தசை பலவீனம் போன்ற பாதிப்புக்கள் ஏற்பட்டு,தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது .

இந்த திடீர் பக்க விளைவுகளுக்கு காரணம் என்ன? என்பது குறித்து தற்போது ஆராயப்பட்டு வருகின்றன.