மேட்டூர் அணையின் உபரி நீர் கால்வாயில் கொத்து கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள் - மக்கள் அதிர்ச்சி
Tamil nadu
By Nandhini
மேட்டூர் அணையின் உபரி நீர் கால்வாயில் கொத்து கொத்தாக ஏராளமான மீன்கள் செத்து மிதப்பதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கொத்து கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள்
மேட்டூர் அணையின் 16வது கண் மதகில் வெளியேறும் உபரி நீரில் ரசாயன கழிவுநீர் கலப்பதால் ஏராளமான மீன்கள் செத்து மிதக்கின்றன.
செத்து மிதக்கும் மீன்களிலிருந்து துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இதனையடுத்து, மேட்டூர் அணையின் உபரி நீர் கால்வாயில் செத்து மிதக்கும் மீன்களை பரிசோதனைக்காக மீன்வளத்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர்.
இது குறித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
