நிரம்பியது மேட்டூர் அணை - 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
By Thahir
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50,000 கன அடியாக அதிகரித்துள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ள அபாய எச்சரிக்கை
மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியில் நீடித்து வருகிறது. இதனால் மேட்டூர் அணையில் 50,000 கன அடிக்கு மேல் உபரி நீர் திறக்க வாய்ப்பு உள்ளதால்,
காவிரி கரையோர மக்கள் மற்றும் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50,000 கன அடியாக அதிகரித்துள்ளதால் அணைக்கு வரும் நீர்வரத்து அப்படியே வெளியேற்றப்படுகிறது.