மேட்டு மகாதானபுரம் அங்காளம்மன் கோவில் திருவிழா - ஏராளமான திருநங்கைகள் பங்கேற்பு

temple festival transgender mahadhanapuram
By Jon Mar 17, 2021 04:06 PM GMT
Report

அங்காளம்மன் கோவில் திருவிழாவில் கூட்டம் கூட்டமாக பங்கேற்ற திருநங்கைகள். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே மேட்டு மகாதானபுரத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ அங்காளம்மன், ஸ்ரீ மலையாள கருப்புசாமி கோவில் திருவிழாவில் இறுதி நாளன்று திருநங்கைகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில் திருநங்கைகள் கண்கவர் ஆடைகளில் அழகு பதுமைகளாக கேட் வாக் நடந்து வந்தது அனைவரையும் பரவசப்படுத்தினர். கடந்த மார்ச் 4 ஆம் தேதி தொடங்கிய திருவிழாவில் தமிழகத்தில் உள்ள ஏராளமான திருநங்கைகள் இத்திருக்கோவிலுக்கு வந்து பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்தும் அலகு குத்தி அக்னி சட்டி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினார்.

இன்று மாலை 6 மணி அளவில் மயான கொல்லை நிகழ்ச்சியும் நடைபெற்று அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது. இத்திருவிழாவில் தமிழகத்தில் உள்ள ஏராளமான திருநங்கைகள் கோவிலில் தங்கி வழிபட்டு தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.