அடக் கடவுளே சாகுற வயசா இது - மெட்டி ஒலி உமா மரணம் !
மெட்டி ஒலி' சீரியலில் விஜி கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் உமா மகேஸ்வரி. 40 வயதான உமா சென்னை காட்டுப்பாக்கத்தில் வசித்துவந்தார். உடல்நலக்குறைவால் பல மாதங்களாக உயிருக்குப் போராடிவந்த உமா இன்று காலை மரணமடைந்தார்.
ஒரு கதையின் கதை', 'மஞ்சள் மகிமை' போன்ற சீரியல்களிலும், ஈ பார்கவி நிலையம்' என்கிற மலையாளப் படத்தின் ஹீரோயினாகவும் உமா நடித்திருக்கிறார். 13 வருடங்கள் மீடியாவில் பயணித்தவர், திருமணத்திற்கு பிறகு மீடியாவிலிருந்து விலகியிருந்தார்.
பல நாட்களாக உடல் நலம் சார்ந்த பிரச்னையால் அவதிப்பட்டு வந்துள்ளார் உமா. இவருடைய கணவர் கால்நடை மருத்துவர். உடல் நலக் குறைவு ஏற்பட்டவுடன், ஈரோட்டிற்கு சிகிச்சைக்காக சென்றிருக்கிறார்.
அங்கேயே இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால், எந்த சிகிச்சையும் பலனளிக்காத நிலையில் இன்று அவர் மரணம் அடைந்திருக்கிறார். அவரது உடல் இன்று சென்னை கொண்டுவரப்படுகிறது.
உமா மகேஸ்வரியின் மரணம் குறித்து அறிந்த சின்னத்திரை பிரபலங்கள், ரசிகர்கள் அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளனர்.