5 ரூபாய்தான்.. எங்கே வேண்டுமானாலும் போகலாம் - மெட்ரோ அசத்தல் அறிவிப்பு!
அதிரடி ஆஃபர் அறிவிப்பை சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
மெட்ரோ நிர்வாகம்
போக்குவரத்து நெரிசலுக்கு ஒரு முக்கிய தீர்வாக மெட்ரோ ரயில் சேவை இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த டிசம்பர் 3-ம் தேதி சென்னை மெட்ரோ ரயிலின் அடித்தள நாள் கொண்டாடப்பட்டது.
இதனை கொண்டாடும் விதமாக அன்று மெட்ரோ ரயில்களில் வெறும் 5 ரூபாய் கட்டணத்தில் பயணிக்கலாம் என்ற அதிரடி அறிவிப்பை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டது.
ஆஃபர் அறிவிப்பு
ஆனால், மிக்ஜாம் புயல், கனமழை காரணமாக அன்று இச்சலுகையை பலரால் பயன்படுத்த முடியவில்லை. எனவே, இந்த கட்டண சலுகை வரும் 17-ம் தேதி (நாளை) மீண்டும் வழங்கப்படுகிறது. static QR, paytm, whatsapp, phonepe மூலமாக ரூ.5 கட்டணம் செலுத்தி மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம்.
ஒரு முறை பயணத்திற்கு மட்டுமே இந்த டிக்கெட் செல்லுபடியாகும். மெட்ரோ ரயில் பாஸ் மூலமாகவோ, காகித க்யூஆர் பயணச்சீட்டு மூலமாகவோ பயணித்தால் இந்த சலுகை பொருந்தாது.
மக்களின் ஒட்டுமொத்த பயண அனுபவத்தை மேம்படுத்தவும், டிஜிட்டல் பயணச் சீட்டுகளை ஊக்குவிக்கவும் இந்த பிரத்யேக சலுகை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.