சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்பவர்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு
தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனால் தமிழக அரசு சொந்த ஊர் செல்பவர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ளது. அதேசமயம் ரயிகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இதனிடையே சென்னை மாநகர மக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்வதில் மெட்ரோ ரயில் சேவை முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் காலை 5:30 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " தீபாவளி பண்டிகையையொட்டி வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில்கள் நாளை (நவம்பர் 2) மற்றும் நாளை மறுநாள் ( நவம்பர் 3) நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்படுகின்றன.
நெரிசல் மிகுந்த நேரங்களில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 5 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும். இதேபோன்று இரவு 11 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த மெட்ரோ ரயில் சேவை போக்குவரத்து நீட்டிப்பு நவம்பர் 2, 3 ஆகிய இரு தினங்களுக்கு மட்டுமே நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.