மதுரை, கோவைக்கு வருகிறது மெட்ரோ ரயில் - மக்கள் மகிழ்ச்சி..!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது அவர் முக்கியமான அறிவிப்புகளை பட்ஜெட்டில் அறிவித்தார்.
மதுரை, கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம்
* கோவை அவிநாசி சாலை உள்ளிட்ட இடங்களில் ரூ.9,000 கோடியில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.
* சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு பட்ஜெட்டில் ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* மதுரையில் ரூ.8,500 கோடியில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.
* விழுப்புரம் மரக்காணத்தில் ரூ.25 கோடியில் பன்னாட்டு பறவைகள் மையம் அமைக்கப்படும்.
* நாகூர் தர்காவை புதுப்பிக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு.
* தேவாலங்களை புதுப்பிக்க ரூ. 6 கோடி நிதி ஒதுக்கீடு.
* தாம்பரம், திருச்சி உள்பட 7 மாநகராட்சிகளில் இலவச வைஃபை (Wifi) செயல்படுத்தப்பட்டுள்ளது.
* தெரு நாய்களுக்கான இனவிருத்தி கட்டுப்பாட்டு மையம் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு.
* சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை அண்ணாலையில் ரூ.621 கோடியில் 4 வழி மேம்பாலம் அமைக்கப்படும்.