மலேசியாவில் மெட்ரோ ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து...
மலேசியாவில் 2 மெட்ரோ ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 213 பயணிகள் காயமடைந்தனர்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் பெட்ரான் இரட்டை கோபுரம் அருகே கேஎல்சிசி ரயில் நிலையம் உள்ளது. இதில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் மெட்ரோ ரயில் ஒன்று பழுதாகி நின்றது.
இதனை பழுது நீக்கும் பணி நடந்துக் கொண்டிருந்தபோது, அதே பாதையில் எதிர்திசையில் 200க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்த மற்றொரு ரயில் நின்று கொண்டிருந்த ரயில் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் 213 பயணிகள் காயமடைந்த நிலையில், அவர்களில் 47 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மலேசிய வரலாற்றில் கடந்த 23 வருடத்தில் நடந்த மிகப்பெரிய விபத்து இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.