மெட்ரோ ரயில் சேவைக்கான கட்டணம் குறைப்பு- இன்று முதல் அமல்
சென்னை மெட்ரோ ரயில் சேவைக்கான கட்டணம் குறைக்கப்பட்டு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. மெட்ரோ ரயில் சேவை திட்டம் மக்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. கூட்ட நெரிசல் இல்லாமல் மிக விரைவில் பயணிக்கக் கூடிய வகையில் மெட்ரோ ரயில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.
இதன் காரணமாகவே மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. அத்துடன் மெட்ரோ ரயிலில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் கட்டணத்தில் இருந்து 50 சதவீத தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கட்டணம் கூடுதலாக இருப்பதாக சாமானியர்கள் கவலை தெரிவித்தார்கள்.
இதனையடுத்து, தமிழக முதல்வர் உத்தரவை அடுத்து சென்னையில் இன்று முதல் மெட்ரோ ரயில் கட்டண குறைப்பு அமலுக்கு வந்திருக்கிறது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சென்னை மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைத்து முதல்வர் பழனிசாமி கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மெட்ரோ ரயிலில் அதிகபட்ச கட்டணம் 70லிருந்து ரூ.50 ஆகவும், 5 முதல் 12 கிலோ மீட்டர் வரை கட்டணம் ரூ.40 லிருந்து ரூ.30 ஆகவும் , 12 முதல் 21 கிலோ மீட்டர் வரை கட்டணம் ரூ.50 லிருந்து ரூ.40 ஆகவும் குறைக்கப்பட்டிருக்கிறது.
மெட்ரோ ரயிலில் 2 முதல் 5 கிலோ மீட்டர் வரை கட்டணம் ரூ.20,0 – 2 கிலோ மீட்டர் வரையிலான கட்டணத்தில் மாற்றம் ஏதுமில்லை என்று அறிவித்துள்ளது.