இந்தியாவில் மெட்ரோ சேவை 26 நகரங்களுக்கு விரிவாக்கம் - பிரதமர் மோடி பெருமிதம்!
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் புதிய மெட்ரோ ரயில் திட்டங்களை காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, மேலும் சில புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், ஹிஞ்சேவாடி - சிவாஜிநகர் இடையிலான மெட்ரோ சேவை, புனேவின் தகவல் தொழில்நுட்ப மையத்திற்குச் சிறந்த போக்குவரத்து இணைப்பை வழங்குவதுடன், நகரின் பழைய மற்றும் புதிய பகுதிகளை எளிதில் இணைக்கும் என தெரிவித்துள்ளார்.

இந்தியா வேகமாகப் பொருளாதார வளர்ச்சி அடைந்து வருவதுடன், வறுமையையும் விரைவாகக் குறைத்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், முந்தைய காலங்களில் வறுமை ஒழிப்பு வெறும் வாக்குறுதிகளாக இருந்த நிலையில், தற்போதைய அரசு அதற்கான நடவடிக்கைகளைச் செயல்படுத்தி வருவதாகத் தெரிவித்தார்.
மேலும், 2014ஆம் ஆண்டுக்கு முன்பு 5 நகரங்களில் 248 கி.மீ. தொலைவுக்கு மட்டுமே இருந்த மெட்ரோ ரயில் சேவை, தற்போது 26 நகரங்களில் 1,400 கி.மீ. தொலைவுக்கு விரிவடைந்துள்ளதாகவும், தினமும் ஒரு கோடிக்கும் அதிகமானோர் மெட்ரோவில் பயணிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தகவல் தொழில்நுட்பம், ஆட்டோமொபைல், மருந்தியல், ஸ்டார்ட்-அப் மற்றும் உற்பத்தித் துறைகளின் முக்கிய மையமாக விளங்கும் புனேவின் வளர்ச்சிக்கு மெட்ரோ உள்ளிட்ட உள்கட்டமைப்புத் திட்டங்கள் பெரிதும் உதவும் என்றும், நகரை மக்கள் வாழ்வதற்கும் பயணிப்பதற்கும் ஏற்றதாக மாற்றும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
வருமானத்திற்கு மீறிய சொத்து சேர்ப்பு : விமல் வீரவன்சவிற்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு IBC Tamil
வீட்டில் லட்சுமி தேவியின் அருள் கிடைக்க வேண்டுமா? தீபாவளிக்கு முன்பு இந்த பொருளை தூக்கி போட்டுருங்க Manithan