’மெட்ரோ மேன் ஸ்ரீ தரன்’ கேரளாவில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக தேர்வு
kerala
bjp
Sreedharan
By Jon
தமிழகத்தோடு சேர்த்து கேரளாவிற்கும் ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் இடதுசாரி கூட்டணியும் ஆட்சியை பிடித்து விடும் முனைப்பில் காங்கிரஸ் கூட்டணியும் உள்ளது. அதே சமயம் பாஜக இந்த தேர்தலில் எப்படியாவது கால் பதித்துவிடும் முடிவில் இருக்கிறது.
இந்த நிலையில் மெட்ரோ மேன் என அழைக்கப்படும் ஸ்ரீ தரன் பாஜகவில் இணைந்தார். தற்போது ஸ்ரீ தரனை பாஜக கேரள முதல்வர் வேட்பாளராக அறிவிக்க முடிவு செய்துள்ளது.