பாஜகவில் இணைகிறார் மெட்ரோ மேன் - யார் இவர் தெரியுமா?
டெல்லி மெட்ரோ ரயிலை கட்டமைத்து மெட்ரோ மேன் என பெயர் பெற்ற ஸ்ரீதரன் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் கேரளாவில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் போட்டியிடலாம் என கூறப்படுகிறது. கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீதரன். 1964-ம் ஆண்டு ராமேஸ்வரத்தைத் தாக்கிய பெரும்புயலில் பாம்பன் பாலம் சிதைந்து போனது.
இதனால் தரை வழி போக்குவரத்து இல்லாமல் ராமேஸ்வரம் துண்டிக்கப்பட்டு தீவுபோல ஆனது.அப்போது சேதமடைந்த பாம்பன் பாலத்தைச் சீரமைத்து, 46 நாள்களில் கட்டிக்கொடுத்து பெரும் பெயர் பெற்றவர் ஸ்ரீதரன்.
மேலும் மலைகளைக் குடைந்து ரயில் பாதைகளைஉருவாக்கிய இவர்தலைநகர் டெல்லியில் முதன்முறையாக மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டபோது அதற்கு தலைமை ஏற்றவர். அதோடு கொல்கத்தா, கொச்சி உள்ளிட்ட மெட்ரோ ரயில் திட்டங்களின் நிர்வாகியாகவும் இருந்து செம்மை படுத்தியவர்.
அதனால் இவருக்கு மெட்ரோ மேன் ஸ்ரீதரன் என்றே அழைக்கப்பட்டார். தற்போது 88 வயதாகும் ஸ்ரீதரன் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறஉள்ளதால் அங்கு தேர்தல் பிரச்சாரத்தின் தொடக்கமாக விஜய் யாத்திரா நடைபெறுகிறது.
இந்த யாத்திரை நிகழ்ச்சியின் போது ஸ்ரீதரன் பாஜகவில் இணைவார் என கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் கேரளாவில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்ரீதரன் போட்டியிடலாம் எனவும் கூறப்படுகிறது.