அதிகரிக்கும் கொரோனா: மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்
covid19
chennai
tamilnadu
metro
By Irumporai
தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், சென்னையில் மெட்ரோ ரயில் சேவை காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,காலை 5.30 மணியிலிருந்து இரவு 11 மணி வரை இயக்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவை இரவுநேர ஊரடங்கு காரணமாக காலை 5.30 மணிமுதல் இரவு 9 மணிவரை மட்டுமே இயங்கும்.
கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள இடங்களில் 5 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
உயிருக்கு ஆபத்தாய் மாறியுள்ள இதய நோய்: சிங்கபூர் ஷொப்பிங்-க்கு மத்தியில் ஷிரந்தியின் அறிக்கை IBC Tamil
உச்சக்கட்ட பரபரப்பில் கைதுகள்: ஷிரந்திக்கு அடுத்து தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவரும் கைது IBC Tamil