ஓடும் மெட்ரோ இரயிலில் குத்தாட்டம் போட்ட பிரபல நடிகை: வைரலாகும் வீடியோ

Viral Actor Dance Lakshmi Menon
By Thahir Nov 10, 2021 10:13 PM GMT
Report

பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான ’கும்கி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் லட்சுமி மேனன்.

இந்தப்படத்தை தொடர்ந்து சசிகுமார் ஜோடியாக 'சுந்தரபானடியன்' படத்தில் இந்நிலையில் லட்சுமி மேனன் மெட்ரோ ரயிலில் குத்தாட்டம் போடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நாயகியாக திகழ்ந்த லட்சுமி மேனன் மேல்படிப்புக்காக இடையில் ஒருசில காலம் திரையுலகில் இருந்து விலகி இருந்தார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ள லட்சுமி மேனன் 2 தமிழ் படத்திலும் ஒரு மலையாள படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் லட்சுமி மேனன் சமீபத்தில் கொச்சி மெட்ரோ ரயிலில் குத்தாட்டம் போட்ட வீடியோவை பகிர்ந்துள்ளார்.

கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் மற்றும் கருப்பு நிற டீசர்ட் உடன் அவர் குத்தாட்டம் போட்ட இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வீடியோவை தற்போது ரசிகர்கள் பலரும் இணையத்தில் ஷேர் செய்து வருகின்றனர். டிரெண்டிங்கில் இருக்கும் இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் பலரும் லைக்குகளை குவித்து வருகின்றனர். அத்துடன் நெட்டிசன்களும் இந்த வீடியோவிற்கு பலவிதமான கமெண்ட்கள் செய்து வருகின்றனர்.