தமிழகத்தில் இன்றும் நாளையும் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

tamil nadu rains chennai rains chennai meteorology department
By Swetha Subash Jan 09, 2022 12:04 PM GMT
Report

தமிழகத்தில் இன்றும் நாளையும் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இன்றும், நாளையும் தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் எனவும்,

ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று தெரிவித்துள்ளது.

ஜனவரி 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் தென்மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும்,

ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவித்துள்ளது.

ஜனவரி 13 அன்று தென்மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்,

ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் வானிலை ஆய்வு மைய செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்,

வெப்பநிலை அதிகபட்சம் 30 டிகிரி செல்சியஸும் குறைந்தபட்சம் 22 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

இதேபோல் தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள பூமத்தியரேகை பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக

இன்று முதல் 11.01. 2022 வரை இடி மழையும், சூறாவளி காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.