வீட்டை உடைத்து படுக்கை அறைக்குள் விழுந்த விண்கல் - பதறி ஓடிய குடும்பம்!

United States of America
By Vinothini May 11, 2023 07:36 AM GMT
Report

 வீட்டின் கூரையை துளைத்து கொண்டு படுக்கை அறையில் விழுந்து விண்கல்லால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விண்கல்

அமெரிக்காவில், நியூஜெர்சி மாகாணத்தில் குடியிருப்பு பகுதி ஒன்றில் வீட்டின் மேற்பகுதியை உடைக்கும் அளவிற்கு வேகமாக வந்த விண்கல் ஒன்று சுவற்றை துளையிட்ட வேகத்தில் படுக்கையறையில் விழுந்துள்ளது.

meteor-fell-inside-bedroom-in-america

இதனால் பதறியடித்த வீட்டின் உரிமையாளர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

ஆராய்ச்சியாளர்கள்

இந்நிலையில், விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் இது குறித்து, "ஈட்டா அக்வாரிஸ் விண்கல் மழை என்பது ஆண்டுதோறும் நடக்கும் நிகழ்வுகளில் ஒன்று.

meteor-fell-inside-bedroom-in-america

தற்போது விழுந்துள்ள இந்த விண்கல் ஹாலியன் எனும் வால் நட்சத்திரத்தில் உள்ள குப்பைகளில் ஒன்று" என்று தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் விண்கல் ஒன்று வீட்டை துளையிட்டுக் கொண்டு படுக்கை அறையில் விழுந்தது அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.