ஹாரி பாட்டர் பார்த்து ஹாக்வார்ட்ஸில் கல்யாணம்...இந்தியாவில் நடைபெறும் முதல் மெட்டாவெர்ஸ் திருமணம்

india couple krishnagiri metaverse marriage first ever harry potter hogwarts
By Swetha Subash Jan 19, 2022 06:04 AM GMT
Swetha Subash

Swetha Subash

in சமூகம்
Report

கிருஷ்ணகிரியில் திருமண ஜோடி ஒன்று தங்களது திருமண வரவேற்பை மெட்டாவெர்ஸ் எனும் தொழில்நுட்பம் மூலமாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சிவலிங்க புரத்தை சேர்ந்தவர் தினேஷ். இவருக்கு ஜனகநந்தினி என்பவருடன் வருகிற பிப்ரவரி 6-ம் தேதி திருமணம் நடக்க உள்ளது.

தனது திருமணத்தை ஒட்டி பல திட்டங்களை தீட்டிய மணமகன், வரவேற்பு நிகழ்ச்சியை புதுமையுடன் நடத்த விரும்புவதாக வருங்கால மனைவி ஜனகநந்தினியிடம் கூறியுள்ளார்.

அதன்படி மேகக் கணினி தொழில்நுட்பத்தின் வாயிலாக உலகில் உள்ள அனைத்து மூலை முடுக்குகளிலும் இருக்கும் நண்பர்களை ஒருங்கிணைத்து வரவேற்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளார்.

மார்க் சக்கர்பெர்க், சத்ய நாடெல்லா போன்ற பெரும் நிறுவன தலைவரின் கனவை நனவாக்கும் விதமாக இந்த திருமண வரவேற்பு அழைப்பிதழ் உருவாக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக இந்த தொழில்நுட்பத்தின் வாயிலாக இணையத்தில் துணி வாங்க வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால், அது சரியாக இருக்குமா என்ற சந்தேகம் உங்களுக்கு நிச்சயம் வரும்.

அப்படி வரும்போது இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நீங்கள் வாங்கும் துணியை அணிந்து அது சரியாக உள்ளதா ?உங்களுக்கு ஏற்றவாறு உள்ளதா என்று கண்கூடாக பார்த்து வாங்க முடியும்.

அப்படிதான் மேகக் கணினி முறையில் முப்பரிமான தோற்றத்துடன் காட்சி படுத்தப்படும். கொடுக்கப்படும் இணைப்பில் உள்ளவர்கள் இந்த கருவிகள் உதவியுடன் நேரடியாக நிகழ்வில் கலந்துகொண்ட உணர்வை ஏற்படுத்தும்.

மெட்டாவெர்ஸ் திருமண வரவேற்பு நடத்த விரும்பியதாகவும், ஹாரி பாட்டர் கதைகளில் வருவதைப் போல மிகப் பிரம்மாண்ட கட்டிடங்கள் வடிவமைத்து இந்த நிகழ்வு இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் மணமகன் தினேஷ் கூறியுள்ளார்.

இதற்காக பல ஆண்டுகளாக கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து வருவதாகவும் , பிளாக்செயின் தொழில்நுட்பம் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்பம் வாயிலாக வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ள இவர்,

டிஜிட்டல் அவதாரங்கள் மூலம் வாழவும் மற்றவருடன் தொடர்பு கொள்ளவும் முடியும் என்பதை எடுத்துக்காட்ட ஒரு காணொளி ஒன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது இந்தியாவின் முதல் மெட்டாவெர்ஸ் திருமணம் என்று அவர் அதில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.