ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடக்கம்; என்ன காரணம் - மெட்டா நிறுவனம் விளக்கம்!

Facebook Instagram Meta Threads
By Sumathi Mar 06, 2024 06:18 AM GMT
Report

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட வலைதளங்களின் சேவைகள் முடங்கின.

சேவைகள் முடக்கம் 

உலகம் முழுவதும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், த்ரெட்ஸ் உள்ளிட்ட வலைதளங்களை பல கோடி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த 3 நிறுவங்களுமே மெட்டா நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

meta

இந்நிலையில், இந்த 3 வலைதளங்களும் திடீரென்று முடங்கின. ஃபேஸ்புக் பக்கத்தை திறந்தால் தானாகவே ‛லாக் அவுட்' ஆனது. இன்ஸ்டாகிராம் பக்கத்தை திறந்தால் முகப்பு பக்கம் தெரியாமல் போனது.

ஃபேஸ்புக், இன்ஸ்டாவை தீவிரவாத அமைப்புகளில் சேர்த்த ரஷ்யா - பின்னணி என்ன

ஃபேஸ்புக், இன்ஸ்டாவை தீவிரவாத அமைப்புகளில் சேர்த்த ரஷ்யா - பின்னணி என்ன

மெட்டா விளக்கம்

இது சைபர் கிரைம் ஹேக்கர்களின் கைவரிசையால் இந்த தடை ஏற்பட்டதா அல்லது தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயல்பாடு துண்டிக்கப்பட்டதா என காரணம் தெரியவில்லை. நீண்ட நேரத்திற்கு பிறகு மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது.

social media

இந்நிலையில், தொழில்நுட்ப சிக்கலால், எங்களின் சில சேவைகளை அணுகுவதில் மக்கள் சிரமப்பட்டனர். நாங்கள் விரைவாக அந்த சிக்கலைத்தீர்த்துவிட்டோம். மக்களின் சிரமத்திற்கு வருந்துகிறோம் என மெட்டா நிறுவன செய்தி தொடர்பாளர் ஆண்டிஸ்டோன் தெரிவித்துள்ளார்.