தொட்ட... நீ கெட்ட... - இணையதளத்தை கலக்கும் MESSI Vs MBAPPE வீடியோ..!

Lionel Messi Viral Video Kylian Mbappé
By Nandhini Dec 26, 2022 12:51 PM GMT
Report

இணையதளத்தில் MESSI Vs MBAPPE வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா

கடந்த டிசம்பர் 18ம் தேதி உலக மக்கள் எதிர்பார்த்த 22-வது உலகக் கோப்பை கால்பந்து - 2022 போட்டியில், இறுதி சுற்றில் நடப்பு சாம்பியன் பிரான்ஸை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா உலகக்கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டத்தை பெற்று வரலாறு சாதனைப் படைத்தது.

அர்ஜென்டினாவின் இந்த வெற்றியை அந்நாட்டு மக்கள் கோலாகலமாக கொண்டாடினர். இந்த கொண்டாடத்தில் ஈடுபட பியூனஸ் அயர்ஸ் நகரத்தில் கோடிக்கணக்கான மக்கள் படையெடுத்து வந்தனர். வெற்றி கொண்டாட்டத்திற்காக அந்நாட்டு அரசு பொது விடுமுறை அறிவித்தது.

இதனையடுத்து, லயோனல் மெஸ்ஸியின் தலைமையிலான சாம்பியன்கள் பியூனஸ் அயர்ஸ் தெருவில் 4 பில்லியனுக்கு மேல் கூடியிருந்த மக்கள் முன்பு பஸ்ஸில் தோன்றினர். மெஸ்ஸியைப் பார்த்ததும் மக்கள் ஆர்ப்பரிக்க ஆரம்பித்தனர்.உலக சாம்பியன்களுக்கு அர்ஜென்டினா மக்கள் உற்சாகமாக வரவேற்பு கொடுத்து மகிழ்ந்தனர்.

ரூபாய் நோட்டில் லயோனல் மெஸ்ஸி

அர்ஜென்டினா நாட்டின் ரூபாய் நோட்டுகளில் லயோனல் மெஸ்ஸி புகைப்படம் வைக்க அந்நாடு அதிகாரப்பூர்வமாக பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

MESSI Vs MBAPPE

MESSI Vs MBAPPE வீடியோ

இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிப்போட்டியில் மைதானத்தில் மெஸ்ஸி தள்ளிய பந்தை எம்பாப்பே கையில் தொட முற்பட்டார். அப்போது, மெஸ்ஸி எம்பாப்பே முன்பு நடந்து வந்தபோது, மெஸ்ஸியைப் பார்த்த எம்பாப்பே அந்த பந்தை தொடாமல் நகர்ந்து சென்றார்.

தற்போது, இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த மெஸ்ஸி ரசிகர்கள் எம்பாப்பே... மெஸ்ஸி பந்தை தொட்ட... நீ கெட்ட... என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.