மெஸ்ஸியை மைதானத்தில் ஓடி வந்து கட்டியணைத்து கதறி அழுத தாய் - நெகிழ்ச்சி வீடியோ வைரல்...!
மைதானத்தில் ஓடி வந்து மெஸ்ஸியை கட்டியணைத்து கதறி அழுத தாயின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மெஸ்ஸியை கட்டியணைத்து கதறி அழுத தாய்
கத்தார் கால்பந்து விளையாட்டு மைதானத்தில் சுமார் 90 ஆயிரம் ரசிகர்கள் மத்தியில் உலக கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி நேற்று ஆரவாரத்துடன், உற்சாகத்துடன் தொடங்கியது.
உலக மக்கள் எதிர்பார்த்த 22-வது உலகக் கோப்பை கால்பந்து - 2022 போட்டியில், இறுதி சுற்றில் நடப்பு சாம்பியன் பிரான்ஸை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா உலகக்கோப்பை கால்பந்து சம்பியன் பட்டத்தை பெற்றி வரலாறு சாதனைப் படைத்துள்ளது.
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், வெற்றி களைப்பில் மைதானத்தில் இருந்த மெஸ்ஸியின் தோளை பின்னால் ஓடி வந்து தாயார் தட்டினார். திரும்பிப் பார்த்த மெஸ்ஸி ஒரு நொடி திகைத்து தன் தாயை பார்த்ததும் கட்டித் தழுவினார். உலகமே தன் மகனை கொண்டாடுவதைப் பார்த்து நெகிழ்ச்சி அடைந்த தாய் மெஸ்ஸியை கட்டி அணைத்து கதறி அழுதார்.
இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த உலக கால்பந்து ரசிகர்கள், சிங்கத்தை பெற்றெடுத்த தாய்... இவள் என்ன தவம் செய்தாளோ... இப்படிப்பட்ட மகனை பெற்றெடுக்க... என்று மகிழ்ச்சியில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Messi's mother comes and hugs him. A mother's pride #FIFAWorldCup #ARGFRA #WorldCupFinal #Messi? pic.twitter.com/OFo6yuR2eg
— Aristotle ? (@goLoko77) December 18, 2022