மெஸ்ஸியின் அறையில் புகுந்து கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்: அதிர்ச்சியில் குடும்பம்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊதிய குறைப்பாடு காரணமாக பிரான்ஸ் நாட்டின் பிஎஸ்ஜி கிளப்பில் இணைந்தது நாம் அறிந்ததே.
தற்போது குடும்பத்துடன் பிரான்ஸ் நாட்டிலுள்ள பாரீஸ் நகரிலுள்ள லி ராயல் மொனிசா ஹோட்டலில் கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து தங்கியிருக்கிறார் மெஸ்ஸி.
இந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி இரவு அவரது அறைக்குள் நுழைந்த கொள்ளையர்கள், மெஸ்ஸி வைத்திருந்த ஆயிரக்கணக்கான யூரோ, பவுண்ட் பணம், நகைகளைக் கொள்ளையடித்தனர்.
அவர் அறையில் மட்டுமல்லாமல் மேலும் மூன்று பேரின் அறைக்குள்ளும் கொள்ளையர்கள் நுழைந்து பணம், நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதற்குப் பின் ஹோட்டல் நிர்வாகம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக அங்கு விரைந்த காவல் துறையினர் ஆய்வுசெய்து விசாரணை செய்து வருகின்றனர்.
ஆய்வில் ஹோட்டலில் பாதுகாப்பு குறைபாடு காரணமாகவே கொள்ளை நிகழ்ந்துள்ளதாகவும், கொள்ளையடிப்பதை வாடிக்கையாகக் கொண்டவர்கள் தான் இவ்வாறு திட்டமிட்டு கச்சிதமாக கொள்ளையடித்திருப்பதாக தெரிவித்துள்ள காவல் துறையினர் சிசிடிவி கேமராக்களை ஆய்வுசெய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.