மெஸ்ஸியை கட்டியணைத்த ரொனால்டோ - புகைப்படத்தை தன் Storyல் Post செய்த மெஸ்ஸி...!
நட்சத்திரங்களின் கால்பந்து போட்டி
உலகின் சிறந்த கால்பந்து வீரர்களான மெஸ்ஸி, ரொனால்டோ ஆகியோர் கடைசியாக ஒரு முறை சவுதி அரேபியாவில் நடைபெற்றது.
இந்தப் போட்டி நட்பு ரீதியில் விளையாடினர். கிறிஸ்டியானோ ரொனால்டோ ஐரோப்பிய லீக் போட்டியிலிருந்து விலகியுள்ளார். இதனால், இனி இவர்கள் இருவரும் மோதிக் கொள்ள வாய்ப்பு ஏற்படப்போவதில்லை.
நேற்று நடைபெற்ற இப்போட்டியை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சான் தொடங்கி வைத்தார்.
பிரான்சை சேர்ந்த பாரீஸ் செயிண்ட் ஜெர்மாயின் எனப்படும் பிஎஸ்ஜி அணியும், சவுதியை சேர்ந்த அல் நசாரும், அல் ஹிலால் அணி வீரர்களும் இடம்பெற்ற ரியாத் சூப்பர் ஸ்டார் என்ற அணிகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
மெஸ்ஸி சிறந்தவாரா, ரொனால்டோ சிறந்தவாரா என்று விவாதப் பொருளாக மாறிய நிலையில், மீண்டும் இரு நட்சத்திரங்களும் தங்களுக்குள் மோதி யார் சிறந்தவர்கள் என்று நிரூபிக்க போட்டி போட்டனர்.
இந்த ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் ரியாத் அணியின் ஆண்டர்சன் கோல் அடிக்க, இறுதியில் 5க்கு 4 என்ற பரபரப்பான ஆட்டத்தில் பிஎஸ்ஜி அணி வென்றது.
இப்போட்டியில் 2 கோல் அடித்த கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆட்ட நாயகன் விருதை பெற்றார். உலகின் டாப் வீரர்களான மெஸ்ஸி, ரொனால்டோ, நேய்மர், கெலியான் எம்பாபே, செர்ஜியோ ராமோஸ் ஆகியோர் விளையாடியதால் இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
புகைப்படத்தை Storyல் Post செய்த மெஸ்ஸி
இப்போட்டி நடந்து முடிந்த பிறகு ரொனால்டோ மெஸ்ஸியை கட்டியணைத்தார்.தற்போது இது தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தை மெஸ்ஸி தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில் Storyல் Post செய்துள்ளார். இதைப் பார்த்த இருவரது ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
Messi posted hugging Ronaldo on his story. ? A man with the purest heart. ?❤️ pic.twitter.com/mYnNzvekYT
— BeksFCB (@Joshua_Ubeku) January 19, 2023
Leo Messi, Mbappé, and Neymar with Cristiano Ronaldo before the match! ?????????pic.twitter.com/alIddJMOhI
— PSG Report (@PSG_Report) January 19, 2023