என்னது கொரிந்தியன் கிளப்பில் இணைகிறாரா மெஸ்ஸி வைரலாகும் புகைப்படம்!
புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி கொரிந்தியன்ஸ் கால்பந்து அணியில் சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லியோனல் மெஸ்ஸி, பார்சிலோனா அணியில் இருந்து வெளியேறியது நாம் அறிந்ததே , மெஸ்லி வெளியேறிய பிறகு பரவலாக பேசப்பட்டது ,
அடுத்து அவர் எந்த அணியில் இணைவார் என்பதுதான் பேசு பொருளான நிலையில் தற்போது மீண்டும் ஒரு பரபரப்பை மெஸ்லி ஏற்படுத்தியுள்ளார் ஆம் பிரேசிலை சேர்ந்த கொரிந்தியன்ஸ் கால்பந்து கிளப் தனது பங்குக்கு ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கொரிந்தியன்ஸ் கால்பந்து கிளப் தனது ட்விட்டர் பதிவில் மெஸ்ஸி தனது ராசியான 10 -ம் எண் கொண்ட ஜெர்சியில் அவர் நிற்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகிறது. அந்த ஜெர்சி கொரிந்தியன்ஸ்அணியுடையது என்பது தான் ஆச்சரியம். அதைவிட அதிசயம், கொரிந்தியன்ஸ் கிளப் இந்த படத்தை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துக் கொண்டு, ஓ, சுமிடோ!" என்று எழுதியுள்ளது.
Oi, sumido! ? pic.twitter.com/ALbMYruOu7
— Corinthians (@Corinthians) August 5, 2021
ஓ, சுமிடோ என்பதன் பொருள், ஹாய், மிஸ்ஸிங் என்பதாகும். தங்கள் கிளப்பில் மெஸ்ஸி சேருவாரா என்ற ஏக்கத்தை புத்திசாலித்தனமாக முன்வைப்பதாக கூறுகின்றனர் இணைய வாசிகள் சிலர்.
அதே சமயம் மெஸ்ஸி ஜெர்சியை வைத்திருக்கும் படம் 2014ம் ஆண்டில் எடுக்கப்பட்டபுகைப்படம் என்பது குறிபிடத்தக்கது. தற்போது 33 வயதான லியோனல் மெஸ்ஸி தனது தொழில்முறை வாழ்க்கையில் முதல் முறையாக பார்சிலோனா கிளப்பில் இருந்து விலகியிருக்கிறார். தற்போது அவர் எந்தவொரு கால்பந்து கிளப்பிலும் இணையவில்லை என்றாலும், பிரபல வீரரை தங்கள் கிளப்பில் சேர்த்துக் கொள்ள பல முன்னணி கால்பந்து கிளப்களும் போட்டிப் போட்டுக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.