‘உன்னை விட மெஸ்ஸிதான் சிறந்தவர்...’ - கத்திய சிறுவனிடம் கோபத்தில் சீறிய ரொனால்டோ..!
‘உன்னை விட மெஸ்ஸிதான் சிறந்தவர்...’ என்று சொன்ன சிறுவனிடம் கோபத்தில் சீறிய ரொனால்டோவின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சிறுவனிடம் கோபத்தில் சீறிய ரொனால்டோ
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
துபாயில், சவுதி ப்ரோ லீக் கால்பந்து தொடரில் அல்-நாசர் அணிக்காக ரொனால்டோ விளையாடி வருகிறார். போட்டி முடிந்து அறைக்கு திரும்பிய ரொனால்டோவிடம், சிறுவன் ஒருவர் உன்னை விட மெஸ்ஸிதான் சிறந்த வீரர் என்று கூறினார்.
அதற்கு கோபம் அடைந்த ரொனால்டோ... முட்டாள்... அப்போ ஏன் நீ இங்கு இருக்கிறாய்... அங்க போய் அவனைப் பாரு... என்று அந்த சிறுவனை கடிந்துகொண்டு வேகமாக வெளியேறினார்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த மெஸ்ஸி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ரொனால்டோவின் இந்த செயலுக்கு தங்களது கண்டனங்களை தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
“Messi is the best”
— L/M Football (@lmfootbalI) March 4, 2023
Ronaldo: “Go watch him then, why you're here”
😂pic.twitter.com/5oiuuVEfYv