Wow... கத்தாரில் மெஸ்ஸி அறை மினி மியூசியமாக மாற்றப்படும் - அந்நாட்டு அரசு அறிவிப்பு

Lionel Messi Qatar FIFA World Cup Qatar 2022
By Nandhini Dec 29, 2022 02:39 PM GMT
Report

கால்பந்து ஜாம்பவான் லயோனல் மெஸ்ஸி

FIFA உலகக் கோப்பை 2022 இறுதிப் போட்டி கால்பந்து ரசிகர்களால் இதுவரை கண்டிராத மிகவும் உற்சாகமான கால்பந்து விளையாட்டாகும். அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கு இடையேயான பரபரப்பான ஆட்டத்திற்குப் பிறகு லயோனல் மெஸ்ஸி தனது அணிக்கு வெற்றியைக் கொடுத்தார்.

அர்ஜென்டினா மக்கள் மட்டுமல்லாமல் உலக நாட்டு மெஸ்ஸியின் ரசிகர்கள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர். இதனையடுத்து, மெஸ்ஸியின் புகைப்படத்தை ரூபாய் நோட்டில் பதிவிட அந்நாடு பரிசீலனை செய்து வருகிறது.

messi-argentina-became-world-champion-qatar

மெஸ்ஸி அறை மினி மியூசியமாக அறிவிப்பு

அர்ஜென்டினா பல தசாப்த கால முயற்சிகள் மற்றும் 5 வெவ்வேறு உலகக் கோப்பைகளுக்குப் பிறகு கால்பந்தாட்ட சக்தியாக தனது நிலையை மீட்டெடுத்துள்ளது.

2022 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மெஸ்ஸி சிறந்த வீரருக்கான தங்கப் பந்தை பெற்றார். கைலியன் எம்பாப்பேவின் எட்டு கோல்களுக்குப் பதிலாக அவர் ஏழு கோல்களை அடித்தார். போட்டியின் போது அதிக கோல்களை அடித்ததற்காக, பிரெஞ்சு கால்பந்து வீரருக்கு தங்க காலணி வழங்கப்பட்டது. லயோனல் மெஸ்ஸியின் ஹோட்டல் அறையை ஒரு சிறிய அருங்காட்சியகமாக மாற்றி கத்தார் பல்கலைக்கழகம் அவரை கவுரவித்துள்ளது.