சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி வரலாறு சாதனைப் படைத்த அர்ஜென்டினா - கடைசி நிமிட திக்...திக்... வீடியோ..!
22-வது உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி வரலாறு சாதனைப் படைத்த அர்ஜென்டினா அணியின் கடைசி நிமிட திக்...திக்... வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உலக கோப்பை கால்பந்து தொடர் -
22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் தொடங்கியது. இப்போட்டியில், பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 நாடுகள் கலந்து கொண்டன. 32 அணிகளின் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் விளையாடி வந்தது.
சாம்பியன் பட்டத்தை தட்டித் தூக்கிய அர்ஜென்டினா
உலக மக்கள் எதிர்பார்த்த உலகக் கோப்பை கால்பந்து - 2022 போட்டியில் இறுதி சுற்றில் நடப்பு சாம்பியன் பிரான்ஸை வீழ்த்தி அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டத்தை தட்டித் தூக்கியுள்ளது.
நேற்று பல அதிரடிகள், ஆச்சரியங்கள், ஆரவாரத்துடன் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் லயோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி ஹூகோ லோரிஸ் தலைமையிலான பிரான்சிடம் நேருக்கு நேர் மோதியது.
இப்போட்டியை காண சுமார் 90 ஆயிரம் ரசிகர்கள் மைதானத்தில் குவிந்தனர். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் தொலைக்காட்சி, இணையதளத்தில் போட்டியை கண்டுகளித்தனர்.
இப்போட்டியின் 23-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்திய அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சி அபாரமான கோல் அடித்து அசத்தினார். மெஸ்சியின் கோலால் உலகம் முழுவதும் இருந்த ரசிகர்கள் உற்சாகத்தில் ஆரவாரத்துடன் துள்ளி குதித்தனர்.
இதனையடுத்து, இப்போட்டியின் கடைசி நிமிடத்தில் பெனால்டி ஷூட்-அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி அர்ஜென்டினா உலகக்கோப்பை கால்பந்து சம்பியன் பட்டத்தை பெற்றி வரலாறு சாதனைப் படைத்துள்ளது.
வைரலாகும் கடைசி திக்...திக்...திக்... நிமிடம்
இந்நிலையில், இப்போட்டியின் கடைசி நிமிட திக்... பெனால்டி ஷூட் - அவுட் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ -
The moment messi's Argentina became World Champion ? pic.twitter.com/jSrNFjyaXP
— Dhruv Solanki (@DHRUV_1696) December 19, 2022
World Cup winning moment ✨ of @Argentina ?? pic.twitter.com/zl3sxnFDEa
— ARG Soccer News ™ ??⚽? (@ARG_soccernews) December 19, 2022