நடுரோட்டில் ரத்தம் சொட்ட சொட்ட கூலித்தொழிலாளி வெட்டி படுகொலை : பழிக்குப் பழியா? பரபரப்பு சம்பவம்
சிவகாசி, சேனையாபுரத்தைச் சேர்நத்வர் பார்த்திபன் (29). இவர் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரும், இவரது நண்பர் துரைப்பாண்டி (27) என்பவம் லாரிசெட் நிறுவனத்தில் பணி முடிந்து விட்டு இரு சக்கர வாகனத்தில் கள்ளிப்பட்டி அருகே வந்து கொண்டிருந்தார்.
அப்போது அடையாளம் தெரியாத ஒரு கும்பல் பார்த்திபன் வந்த இருசக்கர வாகனத்தை வழிமறித்தது.
அப்போது மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அந்த கும்பல் அரவிந்தனை சரமாரியாக வெட்டி சாய்த்தது. இந்தத் தாக்குதலில் தடுக்க சென்ற துரைபாண்டிக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வர, அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இதனையடுத்து, இருவரையும் அப்பகுதி மக்கள் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி அரவிந்தன் பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த துரை பாண்டிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த கொலை வழக்கைப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில், கடந்த வருடம் சிவகாசி மேற்குப்பகுதி வசந்தம் நகரைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக அரவிந்தன் கைது செய்யப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்தது தெரியவந்தது.
இதனால், பழிக்குப் பழி வாங்குவதற்காக இந்த நடந்திருக்கலாம் என்று போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பி ஓடிய கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.