‘என்னா ஒய்யாரத்துல படுத்துருக்காங்க பாருங்க’ - மரக்கிளையின் மேல் ரூம் போட்டு படுத்திருப்பது போல் படுத்து உறங்கும் பெண்

viralphoto kanniyakumari mentallychallengedwoman sleepsatoptree
By Swetha Subash Apr 12, 2022 10:54 AM GMT
Swetha Subash

Swetha Subash

in சமூகம்
Report

25 அடி உயர மரக்கிளையின் மீது ரூம் போட்டது போல் தூங்கி கொண்டிருந்த மனநலம் குன்றிய பெண்; பொதுமக்கள் அதிர்ச்சி.!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ரயில் நிலையம் அருகே காணப்படும் சுமார் இருபத்தைந்தை அடி உயரமான நாவல் மரத்தின் மரக்கிளையில் வட இந்தியாவை சேர்ந்த மனநலம் குன்றிய பெண்மணி ஒருவர் ஹாயாக தூங்கிக் கொண்டிருந்தார்.

‘என்னா ஒய்யாரத்துல படுத்துருக்காங்க பாருங்க’ - மரக்கிளையின் மேல் ரூம் போட்டு படுத்திருப்பது போல் படுத்து உறங்கும் பெண் | Mentally Challeneged Woman Sleeps Atop Tree

சாதாரண நபரால் எளிதில் ஏறி செல்ல முடியாத வகையில் காணப்படும் அந்த மரக்கிளை மீது ஒரு பெண்மணி எந்த சலனமும் இல்லாமல் தூங்கிக் கொண்டிருப்பது பொது மக்களிடையே அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

‘என்னா ஒய்யாரத்துல படுத்துருக்காங்க பாருங்க’ - மரக்கிளையின் மேல் ரூம் போட்டு படுத்திருப்பது போல் படுத்து உறங்கும் பெண் | Mentally Challeneged Woman Sleeps Atop Tree

அந்தப் பெண்மணி கீழே விழுந்து விடுவாரோ என அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கவலை கொண்ட நிலையில், அதை பொருட்படுத்தாமல் அவர் எழும்பி பரிகாசமாக வேடிக்கை பாரத்து கொண்டிருந்த காட்சி அனைவரையும் ஆச்சரியம் அடைய செய்தது.

இதற்கிடையே பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் அங்கு வந்த ரயில்வே போலீசார் பெண்மணியை கீழே இறங்கச் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் வட இந்திய மனநலம் குன்றியவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது ரயில் பயணிகளுக்கு இடையூராக காணப்படுவதாக ரயில் பயணிகள் கூறுகின்றனர்.