மாணவிகளுக்கு இனி கூடுதலாக மாதவிடாய் விடுமுறை - நிர்வாகம் அதிரடி!

Kerala Periods
By Sumathi Jan 18, 2023 11:02 AM GMT
Report

மாணவிகளுக்கு கூடுதலாக மாதவிடாய் விடுமுறையை பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது.

மாதவிடாய்

எர்ணாகுளம், திருப்புனித்துராவில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில், 1912 ஆம் ஆண்டு முதல் மாணவர்களின் ஆண்டுத் தேர்வின் போது 'பீரியட் லீவ்' எடுக்க பழைய கொச்சின் சமஸ்தானம் உத்தரவிட்டது. விடுபட்ட ஆண்டுத்தேர்வை மாணவர்கள் பின்னர் எழுதிக்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது.

மாணவிகளுக்கு இனி கூடுதலாக மாதவிடாய் விடுமுறை - நிர்வாகம் அதிரடி! | Menstrual Leave Extends All Universities In Kerala

இந்நிலையில், நீண்டகாலமாக கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவிகள், தங்கள் மாணவர் சங்கத்தின் மூலம் இதற்கான கோரிக்கையை முன்வைத்து வந்தனர். அதற்கு இணங்கி பல்கலைக்கழகம் 2% வருகை பதிவு தளர்வை தற்போது அறிவித்துள்ளது.

கூடுதல் விடுப்பு 

பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்கள் 75% வரை வருகை பதிவு வைத்திருந்தால் தான் அவர்கள் தங்கள் செமஸ்டர் தேர்வுகளை எழுத அனுமதிக்கப்படுவர். இந்த மாத விடாய் விடுப்பு முழுமையாக வழங்கப்பட்டால் நடைமுறை சிக்கல்கள் வரும் என்பதால் 2% வருகை விலக்கு தர நிர்வாகம் ஒப்புக்கொண்டது.

இதனால் பிஎச்டி உட்பட பல்வேறு பிரிவுகளில் உள்ள 4,000க்கும் மேற்பட்ட பெண் மாணவர்களின் நீண்டகாலக் கோரிக்கை பூர்த்தி ஆகியுள்ளது. இது உயர்கல்வி துறையில் எடுக்கப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த அதே வேளையில் மிகவும் தேவையான முடிவு என்று மாணவர் சங்க தலைவர் நமீதா ஜார்ஜ் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.