பெண்களுக்கு குட் நியூஸ்...- மாதத்திற்கு 3 நாட்கள் மாதவிடாய் விடுமுறை - ஸ்பெயின் அறிவிப்பு
By Nandhini
பெண்களின் இயற்கையான நிகழ்வு மாதவிடாய். அந்த நேரத்தில் பெண்களுக்கே உண்டான வயிற்று வலியால் அவர்கள் பெரிதும் சிரமப்படுவார்கள்.
இருப்பினும், தங்களின் குடும்பம், குழந்தைக்காக பல்வேறு துறைகளில் சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருக்கும் பெண்கள் அந்த நாளிலும் சற்றும் ஓய்வின்றி, தங்கள் வயிற்று வலியோடு வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில்தான் உள்ளனர்.
இந்நிலையில், அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்களுக்கு மாதத்திற்கு 3 நாட்கள் மாதவிடாய் விடுமுறையை அளிக்க ஸ்பெயின் அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மாதவிடாய் விடுமுறை அளிக்கும் முதல் ஐரோப்பிய நாடு என்ற பெருமையை ஸ்பெயின் பெற்றுள்ளது.

நீங்க நினைக்கிற மாதிரியான பொண்ணு நான் இல்லை... ரிலேஷன்ஷிப் குறித்து மனம் திறந்து பேசிய கயாடு லோஹர்! Manithan
