தேர்தல் பிரச்சாரத்தில் வழுக்கி விழுந்த மேனகா காந்தி: உபியில் பரபரப்பு
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாஜக எம்பி மேனகா காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் திடீரென சேற்றில் வழுக்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேனகா காந்தி தேர்தல் பிரச்சாரம்
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இந்த நிலையில் உத்தர பிரதேஷ் மாநிலத்தில் உள்ள சுல்தான்பூர் என்ற பகுதிக்கு பாஜக எம்பி மேனகா காந்தி பிரச்சாரம் செய்வதற்கு சென்றார்.

வழுக்கி விழுந்த மேனாகா காந்தி
காரில் இருந்து இறங்கி அவர் பிரச்சாரம் நடைபெறும் இடத்திற்கு நடந்து சென்ற போது அந்த பகுதியில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக சேறும் சகதியாக இருந்தது. ஒரு இடத்தை அவர் கடக்க முயன்றபோது திடீரென சேற்றில் வழுக்கி விழுந்தார்.
ஆனால் அதிர்ஷ்டவசமாக எந்த காயங்களும் ஏற்படவில்லை அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்றது.