ரஜினிக்கு ஜோடியாகிறாரா கீர்த்தி சுரேஷ்? - அவரது அம்மா வெளியிட்ட தகவல்
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படம் குறித்து நடிகை கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகா சுரேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர்கள் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் ஆகியோர் நடிப்பில் சிவா இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியான படம் அண்ணாத்த. டி.இமான் இசையமைத்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
இதனிடையே பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த நடிகை கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகா, ரஜினியுடன் சரியா 40 வருஷத்துக்கு முன்னாடி 'நெற்றிக்கண்’ படத்துல ஜோடியா நான் நடிச்சேன். அன்னைக்கு ஷூட்டிங்ல எப்படி இருந்தாரோ அதேபோலத்தான்... இல்ல இல்ல, அதை விடவும் அழகாவும் ஆக்டிவாகவும்தான் இன்னைக்கும் இருக்கிறார்.
கீர்த்தி ரஜினியின் பொண்ணு வயசு இருந்துகிட்டு தங்கச்சியா நடிக்கலாமானு சிலர் கேட்டாங்க. சினிமா நிழல்தானேங்க? நிஜத்துல ஒரு வயதான ஒருத்தர் குறைந்த வயது மகளைக் கல்யாணம் செஞ்சா அதைக் குறை சொல்லலாம். இது நடிப்புதானே? இதுல ஏன் வயது அது இதுனு தேவையில்லாத விஷயங்களைப் போட்டு குழப்பிக்கணும்?.
தங்கச்சி என்னங்க, இன்னொரு படத்துல ஜோடியா நடிக்கக் கேட்டாலும் கீர்த்தி நடிப்பார் எனவும் மேனகா சுரேஷ் கூறியுள்ளார்.
இதனால் விரைவில் ரஜினிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.