Tuesday, May 13, 2025

கலைந்த கர்ப்பம்; ஆண்களுக்கு மாதவிடாய் ஏற்படனும் - உச்சநீதிமன்ற நீதிபதி காட்டம்!

Pregnancy Supreme Court of India Abortion
By Sumathi 5 months ago
Report

ஆண்களுக்கு மாதவிடாய் ஏற்பட விரும்புவதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

ஆண்களுக்கு மாதவிடாய் 

மத்திய பிரதேசத்தில் பெண் நீதிபதிகள் பலர் சிறப்பாக செயல்படவில்லை என்ற அடிப்படையில் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவரான அதிதி குமார் சர்மா கர்ப்பம் கலைந்த காலகட்டத்தில் இருந்துள்ளார்.

கலைந்த கர்ப்பம்; ஆண்களுக்கு மாதவிடாய் ஏற்படனும் - உச்சநீதிமன்ற நீதிபதி காட்டம்! | Men To Menstruate For Feel The Pain Supreme Court

இந்நிலையில் இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. பணிநீக்கம் பற்றிய முடிவுக்காக உயர்நீதிமன்றத்திடமும் விளக்கமும் கேட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த 2 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வில் ஒருவரான நீதிபதி பி.வி. நாகரத்னா, இதுபோன்ற நடைமுறை ஆண் நீதிபதிகளுக்கும் அமல்படுத்த வேண்டும். இதனை கூறுவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. அந்த பெண் கர்ப்பிணியாக இருந்திருக்கிறார்.

அவர்களை திருமணம் செய்யக்கூடாது; மீறினால் கடும்.. பஞ்சாயத்தில் வினோத தீர்மானம்

அவர்களை திருமணம் செய்யக்கூடாது; மீறினால் கடும்.. பஞ்சாயத்தில் வினோத தீர்மானம்

நீதிபதி ஆவேசம்

கர்ப்பம் கலைந்தும் உள்ளது. மன மற்றும் உடல் அளவில் அவர் பேரதிர்ச்சியில் இருப்பார். இந்த சூழலில் என்னது இது? என கூறிய அவர், ஆண்களுக்கும் மாதவிடாய் ஏற்பட வேண்டும் என நான் விரும்புகிறேன். அப்போதுதான், அது என்னவென்று அவர்களுக்கு தெரிய வரும்.

கலைந்த கர்ப்பம்; ஆண்களுக்கு மாதவிடாய் ஏற்படனும் - உச்சநீதிமன்ற நீதிபதி காட்டம்! | Men To Menstruate For Feel The Pain Supreme Court

4 ஆண்டுகளாக கறைபடாத சேவையாற்றிய பதிவு உள்ள நிலையில், எந்தவித சட்ட நடைமுறையும் இன்றி அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அதிதி அளித்துள்ள பதிலில், கர்ப்பம் கலைந்த நாட்களில் தாய்மை மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கான விடுமுறையில் இருந்தேன்.

இதனை செயல்பாட்டுக்கான கணக்கீடாக எடுத்து கொள்வது ஒரு பெரிய அநீதி. பணி நீக்கம் என்பது, சமத்துவத்திற்கான அடிப்படை உரிமையை மீறும் செயல் மற்றும் வாழ்வதற்கான உரிமை மற்றும் தனிநபர் சுதந்திரம் ஆகியவற்றை மீறுவதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.