1 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய மனிதனின் கால்தடங்கள் கண்டுபிடிப்பு

men discovery step
By Jon Jan 16, 2021 07:30 AM GMT
Report

சவுதி அரேபியாவில் சுமார் 1,15,000 ஆண்டுகள் பழமையான மனித கால்தடங்கள் கண்டுபிடிக்கப்படுள்ளன. சவுதியின் வடக்கு பகுதியில் உள்ள பழமையான ஏரி ஒன்றிலேயே ஆராய்ச்சியாளர்கள் கால் தடங்களை கண்டறிந்துள்ளனர். அந்த பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அதில் 7 தடங்கள் மனிதனுடையது என கண்டறியப்பட்டுள்ளது. எனவே அதிகளவிலான மனிதர்கள் மற்றும் விலங்குகள் வாழ்ந்திருக்க கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

ஒருவேளை ஒட்டகம், எருமை மற்றும் யானை போன்றவற்றை வேட்டையாடுவதற்காக மனிதர்கள் வந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதினாலும், அதற்கான ஆயுதங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.