நாய், ஆமை என வித்தியாசமாக வரதட்சணை கேட்ட மாப்பிள்ளை! அடுத்த என்ன ஆனது தெரியுமா?

maharashtra dowry marriage stop
By Anupriyamkumaresan Jul 24, 2021 03:02 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in குற்றம்
Report

மகாராஷ்டிராவில் ஆமை , நாயெல்லாம் மாப்பிள்ளை வரதட்சணையாக கேட்டதால் அந்த கல்யாணமே நின்று போயுள்ளது.

நாய், ஆமை என வித்தியாசமாக வரதட்சணை கேட்ட மாப்பிள்ளை! அடுத்த என்ன ஆனது தெரியுமா? | Men Asked Dog Tortoise As A Dowry Marriage Stop

மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் உள்ள ஒரு கல்யாண மாப்பிள்ளை இந்த ஆண்டு பிப்ரவரி 10-ம் தேதி ராமநகர் பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில், ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

நிச்சயதாரத்திற்கு முன்பு, மணமகனின் குடும்பத்திற்கு தங்கமும், பணமும் வரதட்சணையாக வழங்கப்பட்டன. நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு, மணமகனின் குடும்பத்தினர் மணமகளின் உறவினர்களிடம் அதிகமாக வரதட்சணைகேட்டு தகராறு செய்தனர்.

நாய், ஆமை என வித்தியாசமாக வரதட்சணை கேட்ட மாப்பிள்ளை! அடுத்த என்ன ஆனது தெரியுமா? | Men Asked Dog Tortoise As A Dowry Marriage Stop

அதில், அந்த குடும்பம் 21 கால் நகங்கள் கொண்ட ஆமை மற்றும் ஒரு கருப்பு லாப்ரடோர் நாய், ஒரு புத்தர் சிலை ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்தால் தான் உங்கள் பொண்ணை திருமணம் செய்து கொள்வேன் என மணமகன் கூறியுள்ளார்.

நாய், ஆமை என வித்தியாசமாக வரதட்சணை கேட்ட மாப்பிள்ளை! அடுத்த என்ன ஆனது தெரியுமா? | Men Asked Dog Tortoise As A Dowry Marriage Stop

இதனை கேட்டு பெண்ணின் தந்தை அதிர்ச்சியடைந்தார். இதனை தொடர்ந்து, பெண்ணின் தந்தை திருமணத்தை நிறுத்திவிட்டு போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து வரதட்சனை வழக்கில் மணமகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.