ஜெயலலிதா நினைவிடம் திறப்பு: நீண்ட வரிசையில் காத்திருக்கும் தொண்டர்கள்
ஜெயலலிதா நினைவிடம் இன்று திறக்கப்பட்டதை தொடர்ந்து ஏராளமான தொண்டர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பார்வையிட்டு வருகின்றனர். பீனிக்ஸ் பறவை வடிவில் உருவாக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதல்வர் இன்று திறந்து வைத்தார். இதனையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான தொண்டர்கள் வருகை தந்தனர்.
ரிப்பன் வெட்டி ஜெயலலிதாவின் நினைவிடம் திறக்கப்பட்டதும் தொண்டர்கள் உற்சாகமாக முழக்கங்களை எழுப்பினர். இந்நிகழ்வில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், சபாநாயகர் தனபால், மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
அனைவரும் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர், தொடர்ந்து நிர்வாகிகள் அஞ்சலி செலுத்த தொண்டர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பார்வையிட்டு வருகின்றனர்.