கழகத்தினர் என்னை காண நேரில் வர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் அறிவிப்பு
காவிரி படுக்கைக்கு வரும் தன்னை திமுக உறுப்பினர்கள் யாரும் நேரில் சந்திக்க வர வேண்டாம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி செல்கிறார்.
அதன்பின்னர் அவர் ஜூன் 12 ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக சேலம் சென்று மேட்டூர் அணையை நேரில் திறந்து வைக்க உள்ளார்.
இந்நிலையில் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், தூர்வாரும் பணிகளைப் பார்வையிடவும், மேட்டூர் அணையினைத் திறந்து காவிரி நீரைக் குறுவை சாகுபடிக்கு வழங்கிடவும் காவிரிப் படுகைக்கு வருகிறேன்.
கழகத்தினர் நேரில் வர வேண்டாம் என்றும் , காலம் மாறும் போது உங்கள் அன்பு முகம் காண வருவேன் என்றும் பதிவிட்டுள்ளார்.