சாகும் முன் காதலனின் உருக்கமான மெசேஜ் - இறந்த பிறகு முகத்தை கூட பார்க்க வராத காதலி!
காதலியின் தாய் திட்டியதால் மனமுடைந்த காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
காதல் விவகாரம்
கிருஷ்ணகிரி, கொண்டப்ப நாயனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சசிகுமார். இவர் அங்கு உள்ள தனியார் செல்போன் விற்பனை கடையில் பணிபுரிந்து வந்தார். அதே இடத்தில் ஜோன் சில்வியா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதலித்து வந்தனர்.
இவர்கள் காதலுக்கு பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிறகு இளைஞரின் வீட்டார் பெண் வீட்டில் பேசி சம்மதம் வாங்கியுள்ளனர். தொடர்ந்து பெற்றோர்கள் நிச்சயம் செய்து வைத்தனர். அதனையடுத்து, திருமண ஏற்பாடு செய்யும் வேளையில், சற்றும் எதிர்பாக்காத நேரத்தில் சசிகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காதலன் தற்கொலை
தொடர்ந்து போலீஸாரின் விசாரணையில், காதலியின் தாய் திட்டியதால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இந்நிலையில் அவர் சாகும் முன் தன் காதலிக்கு "நான் பிறந்து இருக்கவே கூடாது டா - நானே செத்து போய்டறேன் மா - நீ சந்தோசமா இரு" என்று வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் அனுப்பியுள்ளார்.
மேலும் இவரது இறப்புக்கு காதலியும் அவர் குடும்பத்தினரும் வராமல் இருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.