இந்திய சினிமா தயாரிப்பாளர், டைரக்டர் என்னை பாலியல் துன்புறுத்தல் செய்தனர் - பாகிஸ்தான் நடிகை கதறல்...!

Pakistan
By Nandhini Jan 11, 2023 08:59 AM GMT
Report

இந்திய சினிமா தயாரிப்பாளர் மற்றும் டைரக்டர் என்னை பாலியல் துன்புறுத்தல் செய்தனர் என்று பாகிஸ்தான் பிரபல நடிகை மெஹ்ரீன் ஷா கதறியுள்ளார்.

நடிகை மெஹ்ரீன் ஷா கதறல்

பாகிஸ்தான் சினிமாத்துறையில் பிரபல நடிகையாக இருப்பர் மெஹ்ரீன் ஷா. தற்போது இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவுடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், ஒரு படத்தின் படப்பிடிப்பின் போது இந்திய சினிமா தயாரிப்பாளர் ராஜ் குப்தா மற்றும் பாகிஸ்தான் டைரக்டர் சையத் எஹ்சான் அலி ஜைதி ஆகியோரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், அந்த வீடியோவில் அவர் பேசுகையில்,

நான் அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் ராஜ் குப்தாவும், இஷான் அலியுடன் படப்பிடிப்பு தொடர்பாக சென்றேன். நான் அங்கு வந்த பிறகு இருவரின் நடத்தை மாறியது. இவர்கள் இங்கு வேலை செய்ய வந்தார்களா அல்லது வேறு உள்நோக்கத்துடன் வந்தார்களாகூட எனக்குத் தெரியாது.

தயாரிப்பாளர் மற்றும் டைரக்டர் பாலியல் தொழிலாளர்களை ஓட்டலுக்கு அழைத்தார்கள். நான் இவர்களின் கோரிக்கைக்கு இணங்க மறுத்தேன். அதனால் என்னை துன்புறுத்தினர். எனக்கு உணவு கொடுக்காமல் பட்டினி போட்டனர்.

அப்போது எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. பிறகு படக்குழு உறுப்பினர் ஒருவரிடமிருந்து நிறைய உதவியைப் பெற்றேன். பெண்கள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.   

mehreen-shah-pakistan-actress