பெயர் சூட்டு விழாவில் கணவனை நினைத்து கதறி அழுத நடிகை
மகனின் பெயர் சூட்டு விழா நிகழ்ச்சியின் போது, இறந்த கணவனை நினைத்து பிரபல நடிகை அழுதது அங்கிருந்தோரை கண்கலங்க வைத்தது.
நடிகை மேக்னா ராஜ் ஆக்ஷன் கிங் அர்ஜுனின் சகோரியின் மகனான கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை 10 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சிரஞ்சீவி சார்ஜா கடந்த ஆண்டு ஜூன் மாதம் 7ஆம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். அப்போது கர்ப்பமாக இருந்த மேக்னா ராஜ் அக்டோபர் மாதம் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
அந்த குழந்தைக்கு பெயர்சூட்டு விழா பெங்களூரில் நடைபெற்றது. குழந்தைக்கு ராயன் ராஜ் சார்ஜா என்று பெயர் வைத்துள்ளனர். நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை மேக்னா ராஜ் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
பெயர்சூட்டு விழாவில் நடிகை நஸ்ரியா கலந்து கொண்டார். நஸ்ரியாவும், மேக்னாவும் நெருங்கிய தோழிகள். மேக்னாவுக்கு குழந்தை பிறந்தபோது தன் கணவர் ஃபஹத் ஃபாசிலுடன் மருத்துவமனைக்கு வந்தார் நஸ்ரியா.
பெயர்சூட்டு விழாவில் சிரஞ்சீவியும், மேக்னாவும் சேர்ந்து இருக்கும் புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது. மேலும் பழைய வீடியோக்களை வெளியிட்டனர்.
தன் குழந்தைக்கு பெயர் வைப்பதை பார்க்க கணவர் உயிருடன் இல்லையே என்பதை நினைத்து மேக்னா கண்கலங்கிவிட்டார். மறைந்த சிரஞ்சீவியே மகனாக பிறந்திருப்பதாக அவரின் குடும்பத்தினர் அனைவரும் கருதுகிறார்கள்.