கையில் விருதுடன்... மறைந்த கணவரை நினைத்து உருக்கிய மேக்னா - சோகத்தில் ரசிகர்கள்...!
கையில் விருதுடன், மறைந்த கணவரை நினைத்து சமூகவலைத்தளத்தில் மேக்னா உருக்கமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
காதல் திருமணம்
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வந்தவர் மேக்னா ராஜ். இவர் பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை 10 ஆண்டுகளாக காதலித்து 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
சிரஞ்சீவி சர்ஜா மரணம்
சிரஞ்சீவி சர்ஜா எதிர்பாராதவிதமாக கடந்த 2020ம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இந்திய சினிமாவையே உலுக்கியது. அப்போது, மேக்னா கர்ப்பமாக இருந்தார். இது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
அழகான ஆண் குழந்தை
காதல் கணவனை நினைத்து நினைத்து வாடிய மேக்னாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த ஆண் குழந்தைக்கு ராயன் ராஜ் சர்ஜா என்று பெயர் வைத்தார். இதனையடுத்து, மேக்னா எந்தவிதமான போட்டோஷூட் அல்லது திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தாமல், தன்னுடைய குழந்தையை வளர்ப்பத்தில் ஆர்வம் காட்டி வருகிறார். அடிக்கடி தனது மகனுடன் இருக்கும் போட்டோக்களையும், வீடியோக்களையும் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.
மேக்னாவின் உருக்கமான பதிவு
நடந்து முடிந்த ஃபிலிம் ஃபேர் சவுத் 2022 விழாவில் மறைந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவுக்கு ஸ்பெஷல் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை சிருவின் மனைவியான மேக்னா ராஜ் பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில் மேக்னா ராஜ் தன் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், வீட்டில் சிருவின் போட்டோவுக்கு முன்னால், அந்த விருதுடன் தானும், தனது மகனும் உள்ள போட்டோவை வெளியிட்டு, அதில், சிரு உங்களின் பிளாக் லேடி இறுதியாக வீட்டிற்கு வந்து விட்டாள்.
இதை எப்படி உணருகிறேன் என்பதை வெளிப்படுத்த முடியாது. ஆனால் இதைப் பெற்றதற்கு நீங்கள் எப்படி சரியாக ரியாக்ட் செய்வீர்கள் என்பது என் மனதில் இருக்கிறது. நான் உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன் பேபிம்மா.. நீங்கள் யார் என்பதில் நேர்மையாக இருந்ததற்கு இது. மக்கள் உங்களை அதிக நேசித்துள்ளார்கள். அதனால்தான் நீங்கள் இதை பெற தகுதியானவராக இருக்கிறீர்கள்.
இப்போதும் கூட நம்மைச் சுற்றி அற்புதங்கள் தொடர்ந்து நடக்கின்றன என்பதை உறுதிப்படுத்திக் கொள்கிறேன் என்று ஹார்ட்டின் சிம்பளுடன் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
தற்போது இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் மேக்னாவிற்கு ஆறுதல்கள் கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்.