பிரிட்டன் அரச குடும்பத்தை மேகன் மன்னிக்க தயார் - புதிய தகவல்
பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹாரி மற்றும் இளவரசி மேகன் கடந்த ஆண்டு அரச பதவி மற்றும் பொறுப்புகளிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து இருவரும் அமெரிக்காவில் குடியேறினர். ஆனாலும் இருவரும் அரச குடும்பத்திலிருந்து விலகியதன் பின்னணியில் உள்ள சர்ச்சைகள் ஒயவில்லை.
இந்நிலையில் இளவரசர் ஹாரி மற்றும் இளவரசி மேகன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றை அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அரச குடும்பத்தில் தான் பாகுபாட்டுடன் நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டியிருந்த மேகன் அதனால் இருவரும் அரச குடும்பத்திலிருந்து விலகியதாகவும் தெரிவித்திருந்தனர்.
இதற்கு அரச குடும்பம் வருத்தம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரிட்டன் இளவரசர் பிலிப் உயிரழந்தார்.
அவருடைய இறுதி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஹாரி மட்டும் பிரிட்டன் சென்றிருந்தார். மேகன் கர்ப்பமாக உள்ள நிலையில் பயணிக்கவில்லை.
இந்நிலையில் அரச குடும்பத்தை மன்னிக்க மேகன் தயாராக இருப்பதாக அவருடைய நண்பர் ஒரு ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.
பிலிப் மறைந்துள்ள துயரமான சூழ்நிலையில் குடும்பம் ஒன்றாக இருக்க வேண்டும் என அவர் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.