மேகன் மெர்க்கல் கர்ப்பம்? மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த இளவரசர் ஹரி
Britain
prince
king
By Jon
இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதி, தங்களது இரண்டாவது குழந்தையை வரவேற்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளனர். காதல் கணவர் இளவரசர் ஹரியுடன் அமெரிக்காவில் தற்போது குடியேறியுள்ள மேகன் மெர்க்கல், இரண்டாவது முறையாக தாம் கர்ப்பமாக இருப்பதை அறிவித்துள்ளார். இதனால் தமது மகன் ஆர்ச்சி, மூத்த சகோதரராகிறார் எனவும் மகிழ்ச்சி பொங்க மேகன் தெரிவித்துள்ளார்.
குறித்த தகவலை ஹரி - மேகன் தம்பதிக்கு மிக நெருக்கமான வட்டாரத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக மக்கள் காதலர் தினத்தை கொண்டாடிவரும் நிலையில், மேகன் மெர்க்கல் இந்த தித்திப்பான தகவலை அறிவித்துள்ளார் என அவர்களது செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
