சுரங்க விபத்து.., இறந்ததாக நினைத்தவர் வீடு திரும்பிய அதிசயம்

Meghalaya
By Yashini Feb 15, 2026 06:13 AM GMT
Report

மேகாலயா மாநிலத்தின் கிழக்கு ஜெயந்தியா ஹில்ஸ் பகுதியில் பிப்ரவரி 5ஆம் தேதி சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் டைனமைட் வெடித்து 31 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் Assam மாநிலம் ஸ்ரீபூமி மாவட்டத்தை சேர்ந்த 44 வயது ஷியாம் பாபு சின்ஹா இறந்தார் என்று நினைக்கப்பட்டது.

விபத்தில் சிதைந்திருந்த ஒரு உடலை அவரது குடும்பத்தினர் ஷியாம் பாபு என்று தவறாக அடையாளம் கண்டு, இறுதிச்சடங்கு செய்தனர்.

சுரங்க விபத்து.., இறந்ததாக நினைத்தவர் வீடு திரும்பிய அதிசயம் | Meghalaya Man Comes Back Alive After Funeral

ஆனால் பின்னர் ஷியாம் பாபு திடீரென வீட்டிற்கு திரும்பி வந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இருந்தாலும் அவர் உயிருடன் இருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தனர்.

சுரங்க விபத்து.., இறந்ததாக நினைத்தவர் வீடு திரும்பிய அதிசயம் | Meghalaya Man Comes Back Alive After Funeral

உடலை தவறாக அடையாளம் கண்டதே இந்த குழப்பத்திற்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது.

மேலும், ஷியாம் பாபுவின் பெயரில் அடக்கம் செய்யப்பட்டவர் யார் என்பதை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.