மேகாலயா சட்டசபை தேர்தல் - கள நிலவரம் என்ன?
வட கிழக்கு மாநிலமான திரிபுராவில் கடந்த சில வாரங்களுக்கு முன் சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் மேகாலயா மற்றும் நாகாலாந்தில் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
மேகலாயா தேர்தல்
மேகாலயா மாநிலத்தில் 60 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், சோகியாங் தொகுதி யுடிபி கட்சியின் வேட்பாளர் எச்டிஆர் லைங்தோ காலமானதால் அந்த தொகுதிக்கு தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
இதனால் இந்த மாநிலத்தில் 59 தொகுதிளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. மேகாலயாவில் காங்கிரஸ், பாஜக, கான்ராட் சங்மாவின் தேசிய மக்கள் கட்சி, திரிணாமூல் காங்கிரஸ் இடையே பன்முனைப் போட்டி நடக்கிறது.

11 மணி நிலவரம்
முன்னாள் முதலமைச்சர் முகுல் சங்மா மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கட்சி தாவிய காரணத்தால் மேகாலயாவில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சியாக உள்ளது.
இந்த நிலையில்மேகாலயா, நாகாலாந்தில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், காலை 11 மணி நிலவரம் வெளியாகியுள்ளது. 11 மணி நிலவரப்படி நாகாலாந்தில் 35.76 சதவீதமும் மேகாலயாவில் 26.07 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளது.