மேகதாது அணை கட்டும் பணியை கைவிடுக: எடியூரப்பாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

stalin eduyurappa meghadadudam
By Irumporai Jun 18, 2021 05:11 PM GMT
Report

உச்ச நீதிமன்றத்தின் காவிரி இறுதித் தீர்ப்பிற்கு எதிரான மேகதாது அணைக் கட்டும் முடிவினை கர்நாடக மாநில அரசு உடனடியாக கைவிட வேண்டும்" என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

மத்திய அரசு அனுமதி வழங்கியதும் மேகதாது அணை கட்டப்படும் என கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா ஒருதலைப்பட்சமாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கின்ற நிலையில் அறிவித்திருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.

இத்திட்டம் தமிழ்நாடு விவசாயிகளின் நலனுக்கு விரோதமானது . இப்போது பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேரில் சந்தித்தபோது 'மேகதாது அணைக் கட்டுவதற்கு அனுமதி வழங்கக் கூடாது' என வலியுறுத்தியிருக்கிறேன்.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கின்ற சூழலில், கர்நாடக முதல்வர் எடியூரப்பா தன்னிச்சையாக இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டிருப்பது இரு மாநில நல்லுறவிற்கு எவ்வித்திலும் உகந்த ஒரு நிலைப்பாடு அல்ல என தெரிவித்துள்ளார்.

மேலும், மேகதாது அணைக் கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்றும் தமிழ்நாட்டின் சார்பில் எனது கடுமையான எதிர்ப்பினை தெரிவித்துக் கொள்வதாக அவர்  கூறினார்.