மேக தாது அணை விவகாரம் :தமிழகத்திற்கு அநீதி காட்டக் கூடாது வைகோ!
இன்று பகல் 1 மணி அளவில், டெல்லியில், ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் அவர்களை, தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிக் குழு சந்தித்தனர்
அப்போது, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தனது கருத்துகளை முன்வைத்தார்.
அப்போது பேசிய அவர் : மனித வாழ்க்கையின் உயிர்நாடி தண்ணீர் ஆகும். நதிகளை இணைக்க வலியுறுத்தி, நானும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆயிரக்கணக்கான தொண்டர்களும், தமிழ்நாட்டில் நீண்ட நடைபயணங்களை மேற்கொண்டு பரப்புரை செய்தோம்.
.
இந்த நிலையில் மேகேதாதுவில் கர்நாடகம் புதிய அணை கட்ட முயற்சிப்பது, தமிழ்நாட்டின் உரிமைகளை மறுப்பதாகும்.
தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தர மறுத்தால், இலட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் தரிசு நிலங்களாக மாறி விடும் என கூறினார்.
ஆகவே ஒன்றிய அரசு, கர்நாடகத்துக்கு ஆதரவாக இருந்தால், தமிழ்நாடு மட்டும் அல்ல; ஒட்டுமொத்தமாக இந்தியாவின் வேளாண் பொருளாதாரத்தையே சீர்குலைத்துவிடும்.
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு, இந்தப் பிரச்சினையைத் தாமாக முன்வந்து எடுத்துக்கொண்டு, கர்நாடக அரசின் நடவடிக்கைகளுக்குத் தடை விதித்தது.
மேலும்,இது தொடர்பாக, விசாரணைக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. சுற்றுச்சூழல் துறையின் அனுமதியின்றி, மேகே தாது அணையைக் கட்ட முடியாது என்று, அந்தக் குழு அறிக்கை தந்தது.
ஆனால், டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பபாயம், தமிழ்நாடு அரசின் கருத்து எதையும் கேட்காமல், அவர்கள் பிறப்பித்த ஆணையை ரத்து செய்து விட்டது.
இந்த நிலையில்தமிழ்க முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியினை சந்தித்து, மேகே தாது அணை கட்டக் கூடாது; அப்படிக் கட்டினால், தமிழ்நாட்டுக்குக் கடும் பாதிப்புகள் ஏற்படும் என்பதை எடுத்துக் கூறினார்.
மேகேதாதுஅணை கட்டினால், காவிரி நதிநீரில், தமிழ்நாட்டுக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் ஒதுக்கி, உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஆணை, வெறும் கானல் நீர் ஆகி விடும். என கூறியுள்ளார்.