மேகதாது அணை விவகாரம் தொடர்பாக..மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்தார் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்
மூன்று நாள் பயணமாக நேற்று டெல்லி வந்த அமைச்சர் துரைமுருகன், இன்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்து பேசினார்.
மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டும் விவகாரம், தென் பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கே கட்டப்படும் அணை, காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு உரிய நீர் பங்கீடு / திறப்பு தொடர்பாக இந்த சந்திப்பின் போது மத்திய அமைச்சருடன் துரைமுருகன் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர துரைமுருகன்
உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரியில் இருந்து தமிழகத்திற்கு உரிய நீர் திறக்க வேண்டும்,காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சியை தடுக்க வேண்டும், தமிழக அரசிடம் ஒப்புதல் பெறாமல் கர்நாடகா மத்திய அரசிடம் அனுமதி பெற்றது தவறு என எடுத்துரைத்ததாக கூறினார்.பின்னர் மத்திய அமைச்சர் கர்நாடக மற்றும் தமிழக அரசிடம் கலந்து
பேசி தான் முடிவு எடுப்போம் என தெரிவித்ததாக கூறினார்.