அனைத்துக்கட்சிக் குழு நாளை டெல்லி பயணம்,, காரணம் என்ன?!
மேகதாது அணை விவகாரம் குறித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க தமிழக அனைத்து கட்சி குழு நாளை டெல்லி செல்ல உள்ளது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை அமைக்கும் விவகாரத்தில் தமிழக அரசுக்கும் கர்நாடக அரசுக்கும் மோதல் உள்ளது.
இந்த நிலையில், அனைத்து கட்சிகளின் ஆலோசனை கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கடந்த 12 ஆம் தேதி நடைபெற்றது.
இதில் பாஜக, அதிமுக, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 13 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது,
தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனைத்து கட்சிகளும் முழு ஒத்துழைப்பு வழங்கும்,
மேகதாது அணை தீர்மானங்களை அனைத்து கட்சிகளும் நேரில் சென்று மத்திய அரசிடம் வழங்கவேண்டும் என 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன
இந்த நிலையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேச அனைத்துக்கட்சிக் குழு நாளை டெல்லி செல்கிறது.
அப்போது பிரதமரிடம் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில் நாளை மறுநாள் பிரதமருடன் அனைத்துக்கட்சிக் குழு சந்திக்கவுள்ளது.